இந்தியா

பாராகிளைடிங் சாகசத்தின்போது விபத்து- தென்கொரிய நபர் பலி

Published On 2022-12-25 16:30 IST   |   Update On 2022-12-25 16:30:00 IST
  • கீழே விழுந்த அதிர்ச்சியில் பியோங் மூனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • தென் கொரிய நபரின் சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் கொரியாவை சேர்ந்த ஷின் பியோங் மூன் (50) என்ற நபர் தனது நண்பருடன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது குஜராத் சென்ற அவர்களில், மூன் மெஹ்சானா மாவட்டத்தில் பாராகிளைடிங் சாகசம் செய்தார். அப்போது திடீரென 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மூன் உயிரிழந்தார்.

மாவட்டத்தின் காடி நகருக்கு அருகில் உள்ள விசாத்புரா கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

அப்போது ஷின் பியோங் மூன் தனது பாராகிளைடரின் விதானம் சரியாக திறக்காததால் விபத்து ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக அவர் சமநிலையை இழந்த ஷின் பியோங் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

பலத்த காயங்களுடன் மயக்கத்தில் இருந்த அவரை நண்பர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மூன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கீயே விழுந்த அதிர்ச்சியில் பியோங் மூனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து காடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வதோதராவில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் கொரிய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நபரின் சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News