இந்தியா
டொனால்டு டிரம்புக்கு மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்
- அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
- டொனால்டு டிரம்ப் இன்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, டிரம்ப் இன்று அதிபராக பதவியேற்கிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 47 அடி உயரமுள்ள டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வாழ்த்துகள், வெள்ளை மாளிகைக்கு நல்வரவு என எழுதியுள்ளார்.