இந்தியா

திருப்பதி தேவஸ்தானத்திடம் விளக்கம் கேட்கும் முடிவில் இருந்து மீண்டும் பின் வாங்கிய மத்திய அரசு

Published On 2025-01-19 16:37 IST   |   Update On 2025-01-19 16:37:00 IST
  • நேரில் ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் திருப்பதிக்கு வர உள்ளதாக கூறப்பட்டது.
  • திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் விளக்கம் கேட்கும் முடிவில் இருந்து மீண்டும் பின்வாங்கிய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மாநிலம் திருப்பதி கூட்ட நெரிசல் உயிரிழப்பு, லட்டு கவுன்ட்டர் தீ விபத்து என அடுத்தடுத்து விபத்து நடந்தது.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் விளக்கம் கேட்கும் முடிவில் இருந்து மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தது.

நேரில் ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் திருப்பதிக்கு வர உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் விளக்கம் கேட்கும் முடிவில் இருந்து மீண்டும் பின்வாங்கிய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News