இந்தியா

கோப்புப் படம்

கங்கையில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி.. 4 பேர் மாயம் - பீகாரில் சோகம்

Published On 2025-01-19 16:24 IST   |   Update On 2025-01-19 16:24:00 IST
  • பெரும்பாலோர் கரைக்கு நீந்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • மற்றவரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

இன்று, 17 பேருடன் சென்ற படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே கங்கை நதியில் சென்றுகொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர் என்றும் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை பத்து பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் கரைக்கு நீந்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலியானவர்களில் இருவர் பவன் குமார் (60) மற்றும் சுதிர் மண்டல் (70) என அடையாளம் காணப்பட்ட நிலையில், இனனொருவரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

"காணாமல் போன நான்கு பேரை மீட்கும் பணி இன்னும் நடந்து வருகிறது. சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று மாவட்ட மாஜிஸ்திரேட் மனேஷ் குமார் மீனா தெரித்துள்ளார். 

Tags:    

Similar News