இந்தியா

 கோப்புப் படம்

ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோய்: 16 பேர் உயிரிழப்பு - மத்தியக்குழு நேரில் ஆய்வு

Published On 2025-01-19 13:20 IST   |   Update On 2025-01-19 13:21:00 IST
  • சில நாட்களுக்குப் பிறகு, ஒன்பது பேர் கொண்ட மற்றொரு குடும்பம் இதே போன்ற அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டது.
  • காய்ச்சல், வலி, குமட்டல் மற்றும் சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டம், பதால் கிராமத்தில் பரவி வரும் மர்ம நோய் கடந்த 45 நாட்களில் 16 பேரின் உயிரை பறித்துள்ளது. இந்த மர்ம நோய்க்கு ஆளானவர்களுக்கு காய்ச்சல், வலி, குமட்டல் மற்றும் சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

டிசம்பர் 7, 2024 அன்று நடந்த ஒரு விருந்துக்கு பிறகு ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் நோய்வாய்ப்பட்டது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு, ஒன்பது பேர் கொண்ட மற்றொரு குடும்பம் இதே போன்ற அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டது. அதில் மூன்று பேர் இறந்தனர். ஜனவரி 12 அன்று, பத்து பேர் கொண்ட மூன்றாவது குடும்பம் நோய்வாய்ப்பட்டது. இந்த குடுப்பத்தில் ஐந்து குழந்தைகள் இறந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

 

இந்நிலையில் நோயின் காரணத்தை கண்டறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சர்கள் மட்டத்தில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

அந்த குழு இன்று [ ஜனவரி 19] பாதிப்பு குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்ய உள்ளது. தொற்று வியாதிக்கான சாத்தியம் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயிரிழப்புகள் நியூரோ டாக்சின்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.  

Tags:    

Similar News