சாக்கடையில் கிடந்த சிசு.. சிறுமி செய்த விபரீத செயல் - சிறுவனை கைது செய்த போலீஸ்
- 16 வயதுடைய சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயதுடைய சிறுவன் பழக்கமாகி உள்ளார்.
- மாத்திரைகளை சாப்பிட்ட சிறுமிக்கு வீட்டிலேயே கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் வடிகால் அருகே நிறைய பறவைகள் சுற்றிக்கொண்டு இருந்தன. இதை பார்த்த சிலர், அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. தூக்கி வீசப்பட்ட நிலையில், கரு இருந்ததை அடுத்து, பறவைகள் அதனை இரையாக்கவே அங்கு அதிகளவில் பறந்துள்ளன.
மயக்க நிலையில் இருந்த கருவை நேரில் பார்த்த சிலர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் கருவை சோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் கடந்த 9-ந்தேதி சூரத்தின் அபேக்ஷா நகரில் நிகழ்ந்தது. இதனை தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் 16 வயதுடைய சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். முதலில் தாயும், சிறுமியும் மறுத்த நிலையில், போலீசார் அவர்களின் பாணியில் விசாரித்தபோது உண்மை வெளிவந்தது.
போலீசார் விசாரணையில், 16 வயதுடைய அச்சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயதுடைய சிறுவன் பழக்கமாகி உள்ளார். நட்பாக தொடங்கிய இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதல் கடந்த உறவாக மாறியுள்ளது. இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.
சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், சிறுவன் உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கும், பின்னர் மும்பைக்கும் தப்பியோடி உள்ளார். இதனால் சிறுவன் சிறுமியின் கர்ப்பதை கலைக்க முடிவு செய்து மும்பையில் இருந்து மாத்திரைகளை வாங்கி அனுப்பி உள்ளான். மாத்திரைகளை சாப்பிட்ட சிறுமிக்கு வீட்டிலேயே கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கருவை தூக்கி வடிகால் அருகே வீசியுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமி போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுமி கர்ப்பமாக இருந்ததை டாக்டர்கள் உறுதி உறுதிபடுத்தி உள்ளனர். இதனையடுத்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.