இந்தியா

விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவர்ந்த வெள்ளை புலி திடீர் மரணம்

Published On 2023-05-10 14:15 IST   |   Update On 2023-05-10 14:15:00 IST
  • வெள்ளைப் புலிகள் இந்தியாவில் மத்தியப்பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஒடிசா, காடுகளில் இருப்பதாக அறியப்படுகிறது.
  • விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் குமாரி 9 வெள்ளை புலிக்குட்டிகளை ஈன்றது.

திருப்பதி

வெள்ளைப் புலிகள் இந்தியாவில் மத்தியப்பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஒடிசா, காடுகளில் இருப்பதாக அறியப்படுகிறது.

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் உள்ளன. இதில் 19 வயதான குமாரி பெண் புலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கடந்த சில நாட்களாக இதற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. நேற்று வெள்ளை புலி குமாரி திடீரென இறந்தது.

வெள்ளைப்புலி குமாரி 2004-ல் பிறந்தது. ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் இருந்து 2007-ல் தனது ஆண் துணையுடன் விசாகப்பட்டினம் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டது.

விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் குமாரி 9 வெள்ளை புலிக்குட்டிகளை ஈன்றது.

பல உறுப்புகள் செயலிழந்ததால் வெள்ளை புலி குமாரி இறந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News