ஏரியை நீந்தி கடந்த புலி கூட்டம்- வீடியோ வைரல்
- புலிகள் கூட்டமாக பூங்காவில் உள்ள ஏரியை கடக்கும் காட்சிகளை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
- வீடியோவுடன் அவரது பதிவில், இது என் வாழ்நாளில் கிடைத்த அரிதான காட்சி என குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் ரித்தி என்ற புலி மற்றும் அதன் குட்டிகள் ஏரியை கடந்து சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
பிரமிக்க வைக்கும் நிலப்பரப்பு மற்றும் பல்வேறு உயிரினங்கள் கொண்ட இந்த பூங்கா வன விலங்கு ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக விளங்குகிறது. குறிப்பாக இந்த பூங்காவின் முக்கிய அடையாளமாக பெங்கால் புலிகள் திகழ்கிறது. அங்கு சுற்றுலா சென்ற அகமதாபாத்தை சேர்ந்த சந்தீப் என்ற என்ஜினீயர் புலிகள் கூட்டமாக பூங்காவில் உள்ள ஏரியை கடக்கும் காட்சிகளை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், ரித்தி என்ற புலியும், அதன் குட்டிகளும் பூங்காவின் 3-வது மண்டல பகுதியில் உள்ள ராஜ்பாக் ஏரியை நீந்தி கடந்து மறுகரைக்கு செல்லும் காட்சிகள் பயனர்களை மிகவும் கவர்ந்துள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், இது என் வாழ்நாளில் கிடைத்த அரிதான காட்சி என குறிப்பிட்டுள்ளார்.