10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்த பெண்
- இரவு உணவுகளை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- சர்க்கரை மற்றும் இனிப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உடல் பருமன் பிரச்சனையால் பலரும் அவதிப்படும் நிலையில், ஊட்டசத்து நிபுணரான திக்ஷா என்ற பெண் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் 28 கிலோ எடையை குறைத்துள்ளதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில், 10 நாட்களில் 10 கிலோ எடை வரை குறைத்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், தனது எடை குறைப்புக்காக பின்பற்றிய 5 முக்கிய வழிமுறைகள் குறித்து கூறியுள்ளார்.
அதில், கலோரி அதிகமான உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதை விட கலோரிகளை கணக்கிட்டு ஆரோக்கியமான, ஊட்டச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது. இரவு உணவுகளை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் இனிப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஹார்மோன்கள் மற்றும் மனநிலைக்கான அனைத்து நல்ல கொழுப்புகளையும் சாப்பிடலாம். உடலுக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுங்கள். உடல் எடையை குறைக்க யோகா, நடனம், நடைபயிற்சி, நீச்சல், சைக்கிளிங் போன்றவற்றை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.