இந்தியா

உத்தர பிரதேசத்தில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து

Published On 2025-02-01 08:05 IST   |   Update On 2025-02-01 08:05:00 IST
  • பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
  • லாரியில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே இன்று அதிகாலை கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி போபுரா சௌக் அருகே வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் சத்தம் 3 கி.மீ தூரத்திற்கு கேட்கிறது. உயிரிழப்பு குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சத்தத்தை கேட்டு பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

லாரியில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயணைப்பு படையினரால் சம்பவ இடத்தை நெருங்க முடியவில்லை. இதன்பின் சம்பவ இடத்தை நெருங்கிய தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். 



Tags:    

Similar News