இந்தியா

திருப்பதியில் நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குழந்தைகளுக்கு இலவச கல்வி- தேவஸ்தானம் முடிவு

Published On 2025-01-11 10:37 IST   |   Update On 2025-01-11 10:37:00 IST
  • நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உள்பட 6 பேர் இறந்தனர்.
  • இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ரூ.13 லட்சம் நிதி வழங்க முன் வந்துள்ளனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தரிசன டோக்கன்கள் அமைக்கப்பட்ட கவுண்ட்டர்களில் கடந்த 8-ந்தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சேலத்தைச் சேர்ந்த பெண் உள்பட 6 பேர் இறந்தனர்.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திரா அரசு தலா ரூ.25 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் சிகிச்சை பெற்று வருவபவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டது.

இதே போல இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் கல்வி நிறுவனங்களில் இலவச கல்வி வழங்க அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

மேலும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ரூ.13 லட்சம் நிதி வழங்க முன் வந்துள்ளனர் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News