இந்தியா
சபாநாயகர் அறிவிப்பை எதிர்த்து உத்தவ் தாக்கரே சுப்ரீம் கோர்ட்டில் மனு
- ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
- ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்வு ஜூன் 21-ம் தேதி அன்று சிவசேனா இரண்டாகப் பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது. ஷிண்டே முகாம் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார். ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. 53 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், சபாநாயகர் அறிவிப்பை ஏற்க மறுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.