இந்தியா

கழுகு எனக் கூறிய ஹேமந்த் சோரன்: மக்கள் பாடம் புகட்டுவார்கள் என சிராஜ் பஸ்வான் பதிலடி

Published On 2024-09-23 06:16 GMT   |   Update On 2024-09-23 06:16 GMT
  • கட்சி கூட்டணியில் போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை மாநில தலைமை முடிவு செய்யும்.
  • திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுதியதாக கூறப்படும் சம்பவம் கவலைக்குரியது மற்றும் கண்டனத்துகுரியது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

கர்வா மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹேமந்த் சோரன், மாநிலத்தில் நடந்து வரும் பா.ஜ.க.வின் 'பரிவர்தன் யாத்ராக்கள்' (மாற்றத்திற்கான பேரணிகள்) பற்றி குறிப்பிடுகையில், மற்ற மாநிலங்களின் தலைவர்கள் "கழுகுகள் போல் சுற்றிக் கொண்டிருப்பதை காண முடிகிறது" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜார்க்கண்டிற்கு வந்த மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வரின் இத்தகைய பேச்சுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தீர்ப்பு அனைத்தையும் சொல்லும்.

கட்சி கூட்டணியில் போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை மாநில தலைமை முடிவு செய்யும். திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுதியதாக கூறப்படும் சம்பவம் கவலைக்குரியது மற்றும் கண்டனத்துகுரியது. இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியால் தற்போது வெளிநாடுகளில் இந்தியாவின் மரியாதை உயர்ந்துள்ளது. இப்போது இந்தியா சொல்வதை உலகமே கேட்கிறது என்றார்.

Tags:    

Similar News