VIDEO: 1 லிட்டர் கெமிக்கலில் 500 லிட்டர் 'போலி பால்' தயாரிப்பு - 20 வருடம் ஜோராக நடந்த பிஸ்னஸ்
- கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார்.
- செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்த முடியாது.
உத்தரப் பிரதேசத்தில் ரசாயனத்தை பயன்படுத்தி போலி பால் மற்றும் பன்னீர் தயாரித்த விநியோகம் செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் அகர்வால் டிரேடர்ஸ் உரிமையாளர் அஜய் அகர்வால் உண்மையான பால் போல் தோன்றும் வகையில் ரசாயனங்களில் செயற்கை இனிப்புகள் மற்றும் சுவைகளை கலக்கிறார். இந்த முறையில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அகர்வாலின் கடை மற்றும் 4 குடோன்களில் சோதனை நடத்தி, தொடர்புடைய ரசாயனங்களைப் பறிமுதல் செய்தனர்.
அகர்வால் போலி பாலை உருவாக்க பயன்படுத்திய ரசாயனங்கள் என்ன என்று இன்னும் கண்டறியப்படாத நிலையில் அதில் 5 மில்லிலிட்டர்களை மட்டுமே பயன்படுத்தி 2 லிட்டர் வரை போலி பாலை THAYAARIKAமுடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது 1 லிட்டர் ரசாயனத்தைப் பயன்படுத்தி 500 லிட்டர் போலி பாலை தயாரிப்பதற்குச் சமமாகும்.
சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதால் செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
இந்த கெமிக்கல் பார்முலாவை உள்ளூர் கிராம பால் விற்பனையாளர்களுக்கும் அகர்வால் கற்றுக்கொடுத்துள்ளார். இந்த பார்முலாவை அவர் எங்கு தெரிந்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.