இந்தியா

VIDEO: கோச்சிங் சென்டரில் மகளுடன் பேசிய மாணவனை கத்தியால் சரமாரியாக குத்திய தந்தை

Published On 2025-02-14 14:31 IST   |   Update On 2025-02-14 14:31:00 IST
  • இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார்
  • சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம் .

பயிற்சி மையத்தில் தனது மகளுடன் பேசியதற்காக மாணவன் ஒருவரைப் பெண்ணின் தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.

கடந்த பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை, பயிற்சி மையத்தில் ஒரு மாணவர் ஆபீஸ் ரூமுக்குள் ஆசிரியர் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்டார். இந்த தாக்குதல் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.  

காயமடைந்த மாணவர் கார்த்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் அந்த மையத்தில் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வருகிறார். அதே மையத்தில் படித்து வரும் ஒரு பெண் மாணவியுடன் தொலைப்பேசியில் கார்த்திக் பேசி வந்துள்ளார்.

பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட் இதைப் பற்றி அறிந்ததும், இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். உரையாடலின் போது, ராச்சாத் திடீரென ஒரு கத்தியை எடுத்து கார்த்திக்கை பலமுறை சரமாரியாகக் குத்தினார்.

சம்பவ இடத்திலிருந்த ஒரு ஆசிரியர் தலையிட்டு அவரை தடுத்தார். சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம். பலத்த காயங்களுடன் கார்த்திக்கை மீட்டு பயிற்சி மைய அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட்டை கைது செய்தனர்.  

Tags:    

Similar News