VIDEO: வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக பையுடன் பாராளுமன்றதில் போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி
- பாஜகவின் விமர்சனத்தை வழக்கமான ஆணாதிக்கம் என்று பிரியங்கா தெரிவித்தார்
- இந்துக்கள் மீதான அட்டூழியங்களை குறித்து மத்திய அரசு வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி கைப்பை அணிந்து பாராளுமன்றம் சென்றார். இது இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் செயல் என பாஜக அங்கலாய்த்தது.
பிரியங்கா காந்தி இந்த விமர்சனத்தை, வழக்கமான ஆணாதிக்கம் என்றும் எதை அணிய வேண்டும், எதை அணியக்கூடாது என நான் தான் முடிவெடுப்பேன், நான் விரும்புவதை அணிவேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக கைப்பை அணிந்து பாராளுமன்றம் வந்துள்ளார். மேலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் வங்கதேச இந்துக்கள் மீது நடக்கும் வன்முறையை கண்டிக்கும் வகையில் பைகளை அணிந்து பாராளுமன்ற வளாகத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே நேற்று பாராளுமன்றத்தில் பேசிய பிரியங்கா காந்தி, வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான அட்டூழியங்களை குறித்து மத்திய அரசு வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இக்கட்டில் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
பிரியங்காவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று இதற்கு தீர்வு காணுமா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.