மத்திய பட்ஜெட்: விலை குறைய, அதிகரிக்க வாய்ப்புள்ள பொருட்கள்
- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.
- தொடா்ந்து 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார்.
புதுடெல்லி:
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்நிலையில், பட்ஜெட்டுக்கு பிறகு விலை குறையும் என எதிர்பார்க்கப்படும் பொருள்களின் விவரம்:
மின்னணு வாகனங்கள் மற்றும் செல்போன் பேட்டரி உற்பத்திக்கு வரி சலுகை.
36 வகையான உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகள் விலை குறையும்.
எல்.இ.டி, ஜிங்க், லித்தியம்-அயன் பேட்டரிகள்
பதப்படுத்தப்பட்ட மீன்கள் (ஏற்றுமதி வரி 30-ல் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.)
லெதர் பொருட்கள்
விலை அதிகரிக்க வாய்ப்புள்ள பொருள்கள்:
பின்னப்பட்ட துணிகள் மீதான சுங்க வரி அதிகரிப்பால் விலை அதிகரிக்கும்.
ஊடாடும் பிளாட் பேனல் காட்சிக்கான சுங்க வரி 20 சதவீதமாக அதிகரிப்பால் விலை அதிகரிக்கும்.