செய்திகள்

இந்தியாவில் எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய ஈச்சர் மோட்டார்ஸ் திட்டம்

Published On 2017-11-24 15:20 IST   |   Update On 2017-11-24 15:20:00 IST
வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் இந்தியாவில் எலெக்ட்ரிக் இன்ஜின் கொண்டு இயங்கும் பேருந்துகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தய வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் இந்தியாவில் எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

நகரப்புறங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் பேருந்தை ஈச்சர் மோட்டார்ஸ் தயாரித்து வருவதாக வி.இ. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இலகு மற்றும் கனரக வாகன பிரிவு துணை தலைவர் ஷியாம் மல்லர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். மேலும் புதிய எலெக்ட்ரிக் பேருந்து தயாரிப்பு பணிகளில் உள்ளதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

ஈச்சர் மோட்டார்ஸ் மற்றும் வால்வோ டிரக் நிறுவனங்கள் இணைந்து வி.இ. வணிக வாகனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொண்டு வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் திட்டங்களின் படி ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்திட்ம உள்ளது, வால்வோ உடனான கூட்டணிக்கு நன்றி என மல்லர் தெரிவித்தார்.



டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்கள் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் பணிகளை ஏற்கனவே துவங்கியுள்ளன. சமீபத்தில் கோல்ட்ஸ்டோன்-BYD இந்தியாவில் முதல் எலெக்ட்ரிக் பேருந்தை அறிமுகம் செய்தது. இந்த பேருந்து தற்சமயம் மணாலி மற்றும் ரோஹ்டங் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.

டீசல் மற்றும் எலெக்ட்ரிக் திறன் மூலம் இயங்கும் ஹைப்ரிட் வாகனங்களை வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை மும்பையின் நவி பகுதியில் இயக்கப்படுகின்றன. தற்சமயம் ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களை எதிர்காலத்தில் இயக்கும் பணிகளை மும்முரமாக துவங்கியுள்ளது.

இலகு ரக வாகனங்கள் பிரிவில் ஈச்சர் மோட்டார்ஸ் கணிசமான சந்தை பங்குகளை கொண்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் உதவியோடு எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் குறைவான ஜி.எஸ்.டி. கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் என்பதால் குறைவான விலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News