செய்திகள்
புதிய ஹூன்டாய் கார் கான்செப்ட் வெளியீடு
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கான்செப்ட் கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கான்செப்ட் கார் சாகா என அழைக்கப்படுகிறது. #Hyundai #saga
ஹூன்டாய் நிறுவனத்தின் சாகா கான்செப்ட் கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சாகா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் ஆகும், இந்த மாடல் சௌ பாலோ ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய கான்செப்ட் கார் அந்நிறுவனத்தின் HB20 அடுத்த தலைமுறை மாடலாக இருக்கும் என தெரிகிறது. கிராஸ்ஓவர் மாடலின் ஸ்டைலிங்கில் காரின் தோற்றம் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் கிடைத்திருக்கிறது.
அதன்படி புதிய காரில் கேஸ்கேடிங் கிரில், ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகிறது. சாகா கான்செப்ட் கார் அடுத்த தலைமுறை கிரான்ட் i20 அல்லது i20 மாடல் போன்று இருக்கும் என தெரிகிறது. இந்த காரின் செயல்திறன் சார்ந்த விவரங்கள் அறியப்படவில்லை.
எனினும் காரின் டெயில் லேம்ப்கள், எல்.இ.டி. போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதன் பாட் பகுதி தரையில் இருந்து உயரத்தில் இருக்கிறது, இது சிறிய எஸ்.யு.வி. மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது. சாகா கான்செப்ட் காரின் உற்பத்தி வடிவம் இந்தியாவுக்கு வருமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
நவம்பர் மாத முதல் வாரத்தில் புதிய சாகா கான்செப்ட் கார் குறித்த மேலும் பல விவரங்கள் வெளியகும். சௌ பாலோ ஆட்டோ விழா நவம்பர் 6ம் தேதி துவங்குகிறது.