செய்திகள்
ஊக்கமருந்து பயன்படுத்திய 6 ரஷிய பளுதூக்கும் வீரர்களுக்கு தடை: ரஷியா அதிரடி
ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் ரஷியாவிற்கு, அந்த நாட்டின் பளுதூக்கும் வீரர்கள் 6 பேர் தண்டனை பெற்றது பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஊக்கமருந்து என்ற வார்த்தையை கேட்டாலே ரஷியாவிற்கு அலர்ஜியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 2008 மற்றும் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பெரும்பாலான ரஷிய வீரர்- வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷியாவின் ஊக்கமருந்துக்கு எதிரான சோதனைக்குழு பளுதூக்கும் மற்றும் ஜூடோ போன்ற விளையாட்டில் பதக்கம் பெற்ற வீரர்கள்- வீராங்கனைகளிடம் சோதனை நடத்தியது. இதில் 6 பளுதூக்கும் வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து ஊக்கமருந்துக்கு எதிரான சோதனைக்குழு அதிகாரிகள் கூறுகையில் ‘‘பளுதூக்கும் போட்டியில் 2014-ம் ஆண்டின் ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்ற லாரிஸா கோபெலேவாவிற்கு நான்கு ஆண்டுகளும், 2014-ம் ஆண்டின் ஐரோப்பியன் ஜூனயிர் சாம்பியன் நடேஸ்டாவிற்கு இரண்டு ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற நான்கு பளுதூக்கும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ரஷிய ஜூடோ சாம்பியன் பியோட் காசிரோவிற்கு நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வேணடுமா? வேண்டாமா? என்று வாக்கெடுப்பு நடத்த ரஷியா ஏற்பாடு செய்து வரும் நிலையில் இந்த தடை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் விளையாட்டுத்துறை மந்திரி ‘‘அனைத்து பள்ளிகளிலும் ஊக்கமருந்து தடுப்பு பாடப்பரிவு ஏற்பட்டுத்தப்படும்’’ என்று உறுதியளித்தார்.