செய்திகள்

சுழற்பந்து வீரர்களில் அஸ்வின் புதிய சாதனை

Published On 2016-07-26 10:23 IST   |   Update On 2016-07-26 10:23:00 IST
அஸ்வின் 33 டெஸ்டில் விளையாடி 183 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் 33 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
ஆன்டிகுவா:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீரர் அஸ்வின் முக்கிய பங்கு வகித்தார். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் முத்திரை பதித்தார். முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்காத அவர் 2-வது இன்னிங்சில் 83 ரன் கொடுத்து 7 விக்கெட் சாய்த்தார்.

அஸ்வின் 33 டெஸ்டில் விளையாடி 183 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் 33 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பு ஆஸ்தி ரேலிய சுழற்பந்து வீரர் கிரீம்மெட் 33 டெஸ்டில் 177 விக்கெட் எடுத்து இருந்தார். அஸ்வின் அவரை முந்தி புதிய சாதனை புரிந்தார்.

ஓட்டு மொத்த பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 3-வது இடத்தில் உள்ளார். வேகப்பந்து வீரர்களான வாக்கர்யூனுஸ் (33 டெஸ்டில் 190 விக்கெட்) முதல் இடத்திலும், பர்னஸ் (189 விக்கெட்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

அஸ்வின் 17-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Similar News