செய்திகள்

இண்டோ இன்டர்நே‌ஷனல் பிரீமியர் ‘லீக்’ போட்டிக்கு வீரர்கள் தேர்வு

Published On 2018-10-11 13:48 IST   |   Update On 2018-10-11 13:48:00 IST
இண்டோ இன்டர்நே‌ஷனல் பிரீமியர் ‘லீக்’ கபடி போட்டியில் விளையாட விரும்பும் வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நியூ கபடி சம்மேளனம் மற்றும் ‘டி’ஸ்போர்ட்ஸ் - டிஸ்கவரி சேனல்கள் சார்பில் இண்டோ இன்டர்நே‌ஷனல் பிரீமியர் ‘லீக்’ கபடி போட்டி நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி தொடங்கும் இந்தப்போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் மொத்தம் 62 ஆட்டங்கள் நடக்கிறது. சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.1.25 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது, 3-வது, 4-வது இடங்களுக்கு முறையே ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் வழங்கப்படும்.

இதில் பங்கேற்க விரும்பும் மாவட்ட கபடி வீரர்கள் cp.newkabaddi.org/register என்ற வெப்சைட்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். உலக அளவில் வீரர்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்திய அளவில் மொத்தம் 1000 கபடி வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வீரர்கள் பதிவு செய்வதற்கான கடைசி நாள் வருகிற 30-ந்தேதியாகும். மேற்கண்ட தகவலை நியூ கபடி சங்கத்தின் தமிழக தலைவரும், அர்ஜூனா விருது பெற்றவருமான எஸ். ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News