சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் இன்று மோதல்: சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்
- இன்று நடைபெறும் 4-வது போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
- ராஜஸ்தான் அணி 6-வது வெற்றிக்காகவும், மும்பை அணி 4-வது வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியின் 31-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
மாலை 3.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம் பரம் மைதானத்தில் நடை பெறும் முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஷிகர் தவான் தலைமையி லான பஞ்சாப் கிங்ஸ் அணி கள் மோதுகின்றன.
சி.எஸ்.கே. அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப்பை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி லக்னோ (12 ரன்), மும்பை (7 விக்கெட்), பெங்களூர் (8 ரன்), ஐதராபாத் (7 விக்கெட்), கொல்கத்தா (49 ரன்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. ராஜஸ்தானிடம் 2 முறை (3 ரன், 32 ரன்) தோற்று இருந்தது. அகமதாபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
பஞ்சாப் அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி
சி.எஸ்.கே.வை தோற்கடித்து 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
இந்த ஐ.பி.எல். சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில்
சி.எஸ்.கே. 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோற்றது. இந்த 3 போட்டிகளுமே இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. ஆனால் இன்று நடைபெறும் 4-வது போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இதையொட்டி சேப்பாக்கம் மைதானத்தில் காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர். பிற்பகல் 1.30 மணியளவில் ரசிகர்கள் ஸ்டேடியத்துக்குள் அனு மதிக்கப்பட்டனர்.
ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று மைதானத்துக்குள் சென்றனர். போட்டி அமைப்பாளர்களும், போலீசாரும் எந்த கேட் வழியாக செல்லவேண்டும் என்று ரசிகர்களுக்கு வழிகாட்டி அவர்களை அனுப்பி வைத் தனர். ரசிகர்களின் கூட்டம் அதிகமான அளவில் திரண்டு இருந்ததால் பாது காப்பும் பலப்படுத்தப்பட்டது.
ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் மைதானம் முன்பு சி.எஸ்.கே. கொடியும், டி-ஷர்ட்டும் அமோகமாக விற்பனையானது. மேலும் ரசிகர்கள், ரசிகைகள் தங்களது முகத்தில் பெயிண்டுகளையும் பூசிக் கொண்டனர். சேப்பாக்கம் ஸ்டேடியம் திருவிழா போல் காணப்பட்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி 6-வது வெற்றிக்காகவும், மும்பை அணி 4-வது வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.