ஒருநாள் போட்டியில் கோலி, முகமது சமி சாதனையை சமன் செய்த சுப்மன் கில்
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- இந்திய தரப்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 52 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 87 ரன்கள் குவித்த சுப்மன் கில் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் விராட் கோலி மற்றும் முகமது சமியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
2022 முதல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களில் முகமது ஷமி மற்றும் விராட் கோலியை சுப்மன் கில் சமன் செய்துள்ளார்.
முகமது சமி, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். அதற்கு அடுத்தப்படியாக ஷ்ரேயாஸ் 4, ரோகித் சர்மா, குல்தீப் யாதவ் 3 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.