null
ஏபி. டி. வில்லியர்ஸ்-இன் 'கொஞ்சம் இருங்க பாய்' மொமண்ட்: ரீ-எண்ட்ரி குறித்து கூறியது என்ன?
- எனக்கு அதுபற்றிய உணர்வுகள் வருகின்றன.
- இதுப்பற்றி எந்த உத்தரவாதமும் இல்லை.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி. டி. வில்லியர்ஸ். கிரிக்கெட் உலகில் இவர் "மிஸ்டர் 360" என்று அழைக்கப்படுகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஏபி. டி. வில்லியர்ஸ் சமீபத்திய நேர்காணலின் போது மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளின் போது எந்தவிதமான சூழ்நிலையிலும் பந்து வீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்துவதில் புகழ்பெற்றவர் ஏபி. டி. வில்லியர்ஸ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், அவரது சமீபத்திய கருத்துக்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கலந்த நம்பிக்கையை தூண்டியுள்ளது. கிரிக்கெட் பற்றி சமீபத்திய நேர்காணலில் பேசிய ஏபி. டி. வில்லியர்ஸ், "இன்றும் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். இதுப்பற்றி எந்த உத்தரவாதமும் இல்லை, ஆனால் எனக்கு அதுபற்றிய உணர்வுகள் வருகின்றன."
"என் குழந்தைகள் எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். நான் அவர்களுடன் வலைபயிற்சி செல்ல விரும்புகிறேன். எனக்கு அது பிடித்துவிட்டால், சற்று வெளியே சென்று மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன். ஆனால் அது தொழில்முறை ஐ.பி.எல். அல்லது தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணமாக இருக்காது."
"யாருக்கு தெரியும்? பார்ப்போம். இந்த கண் இன்னமும் வேலை செய்கிறதா என்பதை பார்ப்போம், நான் மீண்டும் முயற்சிக்கிறேன். தற்போது கொஞ்சம் தெளிவற்ற நிலையில் தான் உள்ளது, ஆனால் இது நன்றாக வேலை செய்கிறது. தற்போது என் குழந்தைகளுக்காக இதை செய்கிறேன். அதன்பிறகு மீண்டும் கிரிக்கெட் மூலம் மகிழ்ச்சி அடைய முடியுமா என்பதை பார்க்கிறேன்," என்று தெரிவித்தார்.