கிரிக்கெட் (Cricket)
null

சுப்மன் கில் விவகாரம்.. எதுவும் சொல்ல முடியாது - ரவிச்சந்திரன் அஷ்வின்

Published On 2025-01-21 08:57 IST   |   Update On 2025-01-21 10:38:00 IST
  • ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக அறிவித்து இருக்கலாம்.
  • துணை கேப்டன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.

சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ.-இன் இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களிடையே பேசு பொருளாகியுள்ளது. சிலர் இது சரியான முடிவு என்றும், சிலர் ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக அறிவித்து இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். அப்போது, சுப்மன் கில் தேர்வு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், "தற்போதைய அணியில் வேறு யாரை துணை கேப்டனாக அறிவிக்கலாம் என்று யோசித்து பாருங்கள். சுப்மன் கில் நியமனம் சரி அல்லது தவறு என்று என்னால் எந்த முடிவையும் கூற முடியாது. ஆனால், அவர் தான் கடந்த சீரிசிலும் துணை கேப்டனாக இருந்தார் என்ற விளக்கம் சரியாக தெரிகிறது."

"நான் தவறாகவும் இருக்கலாம், ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் கூட துணை கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, யார் அணியின் தலைவராக இருக்கலாம் என்பதை பொருத்து நிர்வாகம் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்."

"ரிஷப் பண்ட் மற்றும் கேல்.எல். ராகுல் என இருவரில் யார் வேண்டுமானாலும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் அவர்கள் இந்த பொறுப்பை ஆடும் லெவனில் உறுதி செய்யப்பட்ட வீரரிடம் துணை கேப்டன்சி பதவியை வழங்கியுள்ளார்கள். எதிர்காலத்தில் சுப்மன் கில் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டால், அவர் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவிடம் உதவிகளை பெறலாம்," என்று கூறினார். 

Tags:    

Similar News