கிரிக்கெட் (Cricket)
2-வது டி20 போட்டி.. ஜனவரி 25 அன்று சென்னை மெட்ரோ ரெயிலில் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம்
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
- 2 ஆவது டி20 போட்டி ஜனவரி 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இதனையடுத்து 2 ஆவது டி20 போட்டி வரும் 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ம் தேதி நடக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
அன்றைய நாளில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.