மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெறுவதற்கான வலுவான நிலையில் உள்ளோம்: போலண்ட்
- நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் குவித்தது.
- இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் முன்னிலையை 116 ரன்னாக குறைத்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடி ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 221 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் நிதிஷ் குமார் ரெட்டியுடன் ஜோடி சேர்ந்து வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 127 ரன்கள் குவித்தது. வாஷிங்டன் சுந்தர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசி 105 ரன்னுடனுன் களத்தில் உள்ளார்.
தற்போது வரை ஆஸ்திரேலியா 116 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை சிராஜை வைத்துக் கொண்டு நிதிஷ் குமார் ரெட்டி எவ்வளவு ரன் விளாசினார் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் நாங்கள் வலுவான நிலையில் உள்ளோம் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலண்ட் கூறுகையில் "நாங்கள் 116 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளோம். நாங்கள் மிகவும் வலுவான நிலையில் உள்ளோம். உண்மையிலேயே இன்னும் சற்று கூடுதல் சிறப்பாக இருந்திருக்கனும். ஆனால், டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் ஏற்றம் இறக்கம் இருக்கும் என நினைக்கிறேன்.
நாளை காலை விரைவாக ஒரு விக்கெட்டை வீழ்த்தி, சிறப்பான முன்னிலை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்பிறகு ஆட்டம் எப்படி செல்கிறது என பார்க்க வேண்டும்" என்றார்.