கிரிக்கெட் (Cricket)

மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 369 ரன்களில் ஆல் அவுட்

Published On 2024-12-28 23:36 GMT   |   Update On 2024-12-28 23:36 GMT
  • இந்தியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • இந்தியாவின் நிதிஷ் ரெட்டி 114 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மெல்போர்ன்:

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

பாக்சிங் டே என பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் அடித்தார்.

இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்னுடனும், சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.

8வது விக்கெட்டுக்கு இணைந்த வாஷிங்டன் சுந்தர்-நிதிஷ் ரெட்டி ஜோடி 127 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சில நிமிடங்களில் நிதிஷ் குமார் 114 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ், போலண்ட், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

Tags:    

Similar News