கிரிக்கெட் (Cricket)
null

5வது போட்டிக்கு ரெடி.. பிங்க் நிற தொப்பியில் ஜொலிக்கும் ஆஸ்திரேலிய அணி

Published On 2025-01-01 08:25 GMT   |   Update On 2025-01-01 08:30 GMT
  • ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை.
  • ஆஸ்திரேலிய வீரர்கள் பிங்க் நிற தொப்பி அணிந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக டிரா ஆனது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு தயாரான ஆஸ்திரேலிய அணி குழு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. புகைப்படங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் பிங்க் நிற தொப்பி அணிந்துள்ளனர்.

 


ஒவ்வொரு ஆண்டும் சிட்னியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பிங்க் டெஸ்ட் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை பிரதிபலிக்கும் வகையில் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் பிங்க் நிற தொப்பி அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்க இருக்கிறது.

Tags:    

Similar News