கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலிய தொடர்: புஜாராவை கேட்ட கம்பீர்.. No சொன்ன தேர்வுக்குழு - வெளியான புது தகவல்

Published On 2025-01-01 07:42 GMT   |   Update On 2025-01-01 07:42 GMT
  • ஒரு போட்டி மழை காரணமாக டிரா ஆனது.
  • இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக டிரா ஆனது.

நடப்பு டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்திருக்க அதிக வாய்ப்புகள் இருந்த நிலையில், படுதோல்வியை சந்தித்தது ரசிகர்கள் கோபத்தை அதிகப்படுத்தியது.

இந்திய அணி தோல்வியை அடுத்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த தொடரோடு ஓய்வு பெற வேண்டும் என்றும் ஓய்வு பெறுவார்கள் என்றும் ரசிகர்களில் ஒருதரப்பினர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் விளையாட இந்திய அணியில் சத்தேஸ்வர் புஜாரா இடம்பெற வேண்டும் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், கம்பீரின் கோரிக்கையை தேர்வுக் குழு நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்திய வீரர் புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் 11 போட்டிகளில் 993 ரன்களை விளாசியுள்ளார். இவர் நடப்பு டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் விளையாடி இருந்தால், நிச்சயம் குறிப்பிடத்தக்க பலன்களை அணிக்கு ஏற்படுத்தி இருப்பார். 36 வயதான புஜாரா தற்போது கமென்ட்ரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News