விஜய் ஹசாரே டிராபி: கருண் நாயர் சதத்தால் தமிழகத்தை வீழ்த்தியது விதர்பா
- விதர்பா அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- விதர்பா சார்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 111 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழகம், விதர்பா அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 48.4 ஓவரில் 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. துஷார் ரஹேஷா 75 ரன்கள் எடுத்தார். முகமது அலி 48 ரன்னும், சித்தார்த் 40 ரன்னும் எடுத்தனர்.
விதர்பா சார்பில் தர்ஷன் நல்கண்டே 6 விக்கெட்டும், ஹர்ஷ் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. அந்த அணியின் கருண் நாயர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
இறுதியில், விதர்பா அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கருண் நாயர் 111 ரன்னும், ஷுபம் துபே ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.