கிரிக்கெட் (Cricket)
AUSvIND.. தொடர் மழை: 13 ஓவரில் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்
- டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
- போட்டி தொடங்கிய 5 ஓவரில் மழை குறுக்கிட்டது.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தொடங்கியது. 5 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டு மீண்டும் தொடங்கியது. அதனை தொடர்ந்து 13-வது ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் உணவு இடைவேளைக்கான நேரம் வந்தது. இடைவேளை நேரம் முடிந்த பிறகும் கூட மழை விட்டபாடு இல்லை. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் முதல் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர்.
கவாஜா 19 ரன்களுடனும் நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.