விவாகரத்து சர்ச்சை- முதல் முறையாக மவுனம் கலைத்த சாஹலின் மனைவி
- டான்ஸ் மாஸ்டருக்கும் தனஸ்ரீக்கும் இடையிலான நெருக்கம் விவாகரத்து காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- இது தொடர்பாக புகைப்படம், வீடியோ என பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக யுவேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்திருக்கிறார்கள். மேலும் இருவர் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன. இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யக்கூடும் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மும்பையைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் பிரதிக் உடேகர். இவருக்கும் தனஸ்ரீ வர்மாவுக்கும் இடையிலான நெருக்கம் சாஹல் பிரிவிற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக புகைப்படம், வீடியோ என பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாகவே எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிக கடினமாக இருக்கிறது. உண்மையாகவே வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், ஆதாரமில்லாத வதந்திகள், உண்மையை சரிபார்க்காமல் சொல்வது, வெறுப்பை பரப்பும் ட்ரோல்களால் என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதுதான்.
எனக்கான நல்ல பெயரை கட்டமைக்க நான் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளேன். எனது மௌனம் பலவீனத்தின் அடையாளம் அல்ல. வலிமையின் அடையாளம். எனவே, என்னைப் பற்றிய உண்மையின் மீது மட்டுமே கவனம் செலுத்தி முன்னேறி செல்வதை நான் தேர்வு செய்ய விரும்புகிறேன். உண்மை உயர்ந்து நிற்கும்.
என்று தனஸ்ரீ வர்மா கூறினார்.