சாம்பியன்ஸ் டிராபி: முதல் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதல்
- லீக் போட்டி முடிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
- நாளை மறுதினம் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
8துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றன. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 79 ரன்னும், அக்சர் படேல் 42 ரன்னும் எடுத்தனர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா 45 ரன்கள் அடித்தார்.
அடுத்து ஆடிய நியூசிலாந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேன் வில்லியம்சன் ஓரளவு தாக்குப் பிடித்து அரைசதம் கடந்து 81 ரன்னில் அவுட்டானார். இதன்மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் அறிமுக போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், நாளை மறுதினம் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.