கிரிக்கெட் (Cricket)

VIDEO: பிலிப்ஸ் பிடித்த கேட்சை விராட் கோலிக்கு செய்து காட்டிய ஜடேஜா

Published On 2025-03-02 21:32 IST   |   Update On 2025-03-02 21:32:00 IST
  • 300-வது போட்டியில் விளையாடும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்
  • கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சால் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி பந்துவீச்சில் கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

விராட் கோலியின் 300-வது போட்டியை காண அவரது மனைவி அனுஷ்கா சர்மா துபாய் வந்திருந்தார். இந்நிலையில், கோலியின் விக்கெட்டை பார்த்து அனுஷ்கா சர்மா கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது.

இதனிடையே கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்சை விராட் கோலிக்கு ஜடேஜா செய்து காட்டினார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News