
ஐ.பி.எல். 2025: வரலாற்று சாதனையுடன் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்
- குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.
- பஞ்சாப் அணியின் ஸ்ரேயஸ் அய்யர் 97 ரன்களை விளாசினார்.
பத்து அணிகள் மோதும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 243 ரன்களை குவித்தது. இது நேற்றைய போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்ற சாதனையை படைத்தது.
இதைத் தொடர்ந்து 244 ரன்களை துரத்திய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதோடு அகமதாபாத் மைதானத்தில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையையும் பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்றது.