ஐ.பி.எல்.
null

சி.எஸ்.கே. பயிற்சியாளர்கள் குழுவில் இணைகிறார் ஸ்ரீராம்

Published On 2025-02-24 20:10 IST   |   Update On 2025-02-24 20:11:00 IST
  • சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் உள்ளார்.
  • பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி இருந்து வருகிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 சீசன் முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.

அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங், பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹசி, பந்து வீச்சு ஆலோசகராக எரிக் சைமன்ஸ் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் துணை பந்து வீச்சு பயிற்சியாளரான செயல்படுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

ஸ்ரீராம் இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு பயிற்சியாளரான இருந்துள்ளார். சென்னை அணியில் அஸ்வின், ஜடேஜா, ஷ்ரேயாஸ் கோபால், நூர் அகமது, தீப் ஹூடா, ரச்சீன் ரவீந்திரா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

சி.எஸ்.கே. அணியில் இருந்து வெளியேறிய வெயின் பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆலோசகராக இணைந்துள்ளார். இதனால் பிராவோவிற்குப் பதிலாக ஸ்ரீதரன் ஸ்ரீராம் சேர்க்கப்பட்டுள்ளார்.

2016 முதல் 2022 வரை ஆஸ்திரேலியா அணியின் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடருக்காக வங்கதேச அணியின் ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் லக்னோ அணியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனில் 5-வது இடத்தை பிடித்து பிளே-ஆப் சுற்று வாய்ப்பை தவறவிட்டது. ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி 4-வது இடத்தை பிடித்தது.

Tags:    

Similar News