ஐ.பி.எல்.(IPL)
76 ரன்கள் விட்டுக்கொடுத்த ஆர்ச்சர் குறித்து இனவாத கருத்து தெரிவித்த ஹர்பஜன்

76 ரன்கள் விட்டுக்கொடுத்த ஆர்ச்சர் குறித்து இனவாத கருத்து தெரிவித்த ஹர்பஜன்

Published On 2025-03-24 14:19 IST   |   Update On 2025-03-24 14:19:00 IST
  • ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்களை வாரி வழங்கினார்.
  • இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி

நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) ரன் வழங்குவதில் வள்ளலாக திகழ்ந்தார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்கள் வாரி வழங்கினார். இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய மொகித் ஷர்மா விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் (டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக) விட்டுக்கொடுத்ததே மோசமான பந்து வீச்சாக இருந்தது.

அந்த போட்டியை வர்ணனை செய்த ஹர்பஜன் சிங், ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் குறித்து இனவாத கருத்து தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், "லண்டன் கருப்பு டாக்ஸிகளின் மீட்டரைப் போல, ஜோப்ரா ஆர்ச்சரின் மீட்டரும் அதிகமாகவே உள்ளது என ஹர்பஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் கருப்பு டாக்ஸியுடன் ஆர்ச்சரை ஒப்பிட்டுப் பேசியது 'இனவாத கருத்து' என வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். 

Tags:    

Similar News