
ஐபிஎல் 2025: கொல்கத்தாவுக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்
- ஜுரெல் 33 ரன்களும், ஜெய்ஸ்வால் 29 ரன்களும் சேர்த்தனர்.
- வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஐபிஎல் 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 13 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் சிறப்பாக பந்து வீச ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
ரியான் பராக் 25 ரன்னிலும், நிதிஷ் ராணா 8 ரன்னிலும், ஹசரங்கா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷுபம் துபே 9 ரன்னிலும், ஹெட்மையர் 7 ரன்னிலும் வெளியேறினர்.
துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாஃப்ரா ஆர்ச்சர் அதரடியாக இரண்டு சிக்சர்கள் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்ச்சர் 7 பந்தில் 16 ரன்கள் அடித்தார்.
கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.