ஐ.பி.எல்.(IPL)
கிரிக்கெட் என்று சொல்வதற்கு பதில் பேட்டிங் என்று சொல்லுங்கள்- ரபாடா ஆதங்கம்

கிரிக்கெட் என்று சொல்வதற்கு பதில் பேட்டிங் என்று சொல்லுங்கள்- ரபாடா ஆதங்கம்

Published On 2025-03-26 16:56 IST   |   Update On 2025-03-26 16:56:00 IST
  • இந்த சீசனில் 5 போட்டிகள் முடிந்த நிலையில் 3 போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.
  • போட்டியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்காக இப்படி பிளாட் பிட்ச் அமைக்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டி கடைசி ஓவர் வரை வாணவேடிக்கையாக இருந்தது.

முதலில் பேடிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் குவித்தது. இது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப்பின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதே சமயம் இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாக பதிவானது.

இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி கடைசி வரை போராடி 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சீசனில் தற்போது வரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3 போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியை கிரிக்கெட் என்று சொல்வதற்கு பதிலாக பேட்டிங் என்று சொல்லலாம் என தென் ஆப்பிரிக்கா அணியின் வீரரும் குஜராத் அணியின் வீரருமான ரபாடா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு மைதானமும் பிளாட் பிட்ச்சாக உள்ளது. போட்டியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்காக இப்படி பிளாட் பிட்ச் அமைக்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியை இனிமேல் கிரிக்கெட் என்று கூறாதீர்கள், பேட்டிங் என்று சொல்லுங்கள் அது தான் சரியாக இருக்கும்.

சில சாதனைகள் முறியடிக்கப்படுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது பரவாயில்லை. அதிக ஸ்கோரிங் ஆட்டங்கள் நல்லது. ஆனால் குறைந்த ஸ்கோரிங் ஆட்டங்களும் அப்படித்தான். பேட்டிங் மற்றும் பந்துக்கு இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்று ரபாடா ஆதங்கத்துடன் கூறினார். 

Tags:    

Similar News