
அண்ணே இது புதுசா இருக்குனே.. தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆன 3 லக்னோ கேப்டன்கள்
- 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.
- லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 14 சீசன்களாக 8 அணிகள் மட்டுமே விளையாடி வந்த நிலையில் 15-வது சீசனில் இருந்து கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டது.
2022-ம் ஆண்டில் குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கோப்பையை வென்றது. லக்னோ அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. 2023-ம் ஆண்டு குஜராத் 2-வது இடத்தையும் லக்னோ அதே 3-ம் இடத்தையும் பிடித்தது. கடந்த ஆண்டு லக்னோ 7-வது இடத்தை பிடித்தது. ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளில் அதிக வெற்றி பெற்ற டாப் 5 அணிகளில் லக்னோ அணி 4-வது இடத்தில் உள்ளது.
2022ல் அறிமுகமான லக்னோ, தொடர்ந்து இரண்டு சீசன்களில் (2022, 2023) பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. 2024-ல் சற்று பின்தங்கினாலும், 44 போட்டிகளில் 24 வெற்றிகளுடன் 55.81% வெற்றி சதவீதத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன்களாக களமிறங்கிய அனைவரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். அதன்படி 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.
அதேபோல் 2023-ம் ஆண்டு மற்றொரு கேப்டனான குர்ணால் பாண்ட்யாவும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். அந்த வகையில் இந்த சீசனில் கேப்டனாக களமிறங்கிய ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகியுள்ளார்.
இதன் மூலம் லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். இது புதுவிதமான சாதனையாக உள்ளது.