ஐ.பி.எல்.(IPL)
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட்: மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்
- குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- பஞ்சாப் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் அரை சதமடித்து அசத்தினார்.
அகமதாபாத்:
ஐபிஎல் 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. இதில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்தது.
இதற்கிடையே, ஆட்டத்தின் 11வது ஓவரில் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இந்நிலையில், பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் 19வது முறையாக டக் அவுட்டாகி ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.