
நீ இறங்கி ஆடு கபிலா.. எனது சதத்தை பற்றி கவலைப்படாதே- ஷ்ரேயாஸ் குறித்து மனம் திறந்த ஷஷாங் சிங்
- ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பந்து கூட சந்திக்கவில்லை.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 243 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் முதலாவதாக பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது அதிரடியாக விளையாடி அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசியில் ஒரு ஓவர் மீதம் இருந்தது. ஷ்ரேயாஸ் சதம் அடிக்க அதிக வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி ஓவரை முழுவதும் ஷஷாங்க் சிங் விளையாடி ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு பந்து கூட கொடுக்காமல் 5 பவுண்டர்கள் விளாசினார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி வெளியில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
யாராக இருந்தாலும் எதிரில் இருப்பவர் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தால் ஒரு ரன் எடுத்து கொடுத்து அவரை சதம் அடிக்க முயற்சி செய்யும் வீரர்கள் மத்தியில் இவர் செய்த காரியம் அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்ட்ரைக் மாற்றதது குறித்து ஷஷாங்க் சிங் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், உங்களுக்கு ஸ்ட்ரைக் வேண்டுமா என ஸ்ரேயஸிடம் நான் கேட்பதற்கு முன்பாகவே "எனது சதத்தை பற்றி நீ கவலைப்படாதே. எல்லா பந்துகளையும் அடித்து விளையாடு. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இது ஒரு அணியை சார்ந்த விளையாட்டு என ஷ்ரேயஸ் கூறிவிட்டார். ஆனால் அதுபோன்ற தருணங்களில் சுயநலமின்றி செயல்படுவது மிகவும் கடினமான ஒன்று. ஐபிஎல்-ல் சதம் விளாசுவது எளிதான விஷயம் அல்ல என ஷஷாங்க் கூறினார்.