கிரிக்கெட் (Cricket)

விராட் கோலி உடனான உறவு எப்படி?: மனம் திறந்த டோனி

Published On 2024-09-01 11:31 GMT   |   Update On 2024-09-01 11:31 GMT
  • விராட் கோலி கடந்த 16 ஆண்டுக்கு மேலாக விளையாடி, பல்வேறு சாதனை படைத்து வருகிறார்.
  • உலக கிரிக்கெட்டில் விராட் கோலிதான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என டோனி பாராட்டினார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி, பல்வேறு சாதனை படைத்து வருகிறார்.

விராட் கோலி இதுவரை 26,000-க்கும் அதிகமான ரன்களையும், 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

இவருடைய வளர்ச்சிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

ஆரம்ப காலங்களில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறினார். அதனால் அவரை நீக்குவதற்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு முடிவெடுத்ததாக கூறப்பட்டது. அப்போது தேர்வுக் குழுவை எதிர்த்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததாக அப்போதைய துணை கேப்டன் சேவாக் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

2019-ம் ஆண்டுக்குப் பின்னர் சதமடிக்காமல் தடுமாறிய காலங்களில் டோனிதான் தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாக விராட் கோலி தெரிவித்ருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலிக்கும் உங்களுக்கும் எம்மாதிரியான உறவு இருக்கிறது? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய நிகழ்ச்சியில் விராட் கோலிக்கும் உங்களுக்கும் எம்மாதிரியான உறவு இருக்கிறது? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த டோனி, நாங்கள் 2008 -ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறோம். எங்களுக்கு இடையே வயது வித்தியாசம் இருக்கிறது. எனவே அவருக்கு நான் பெரிய அண்ணன் போன்றவரா அல்லது சக வீரரா என்பது தெரியவில்லை. நாளின் இறுதியில் நாங்கள் நாட்டுக்காக விளையாடிய சக வீரர்கள். நாங்கள் இந்தியாவுக்காக நீண்ட காலம் ஒன்றாக விளையாடினோம் என்பது உங்களுக்கு தெரியும். உலக கிரிக்கெட் என வரும்போது விராட் கோலி மிகவும் சிறந்தவர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News