கிரிக்கெட் (Cricket)

வில்லியம்சன் சதம்.. இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

Published On 2024-12-16 06:31 GMT   |   Update On 2024-12-16 06:31 GMT
  • வில்லியம்சன் 156 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
  • 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 453 ரன்கள் குவித்தது.

ஹேமில்டன்:

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 347 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 143 ரன்னில் சுருண்டது.

204 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து இருந்தது.

வில்லியம்சன் 50 ரன்னும், ரவீந்திரா 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வில் யங் 60 ரன் எடுத்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது.

முன்னாள் கேப்டன் வில்லியம்சன் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 137 பந்தில் 14 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். 105-வது டெஸ்டில் விளையாடும் வில்லியம்சனுக்கு இது 33-வது சதமாகும். அவர் 156 ரன் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் நியூசிலாந்து 453 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News