கிரிக்கெட் (Cricket)

10 ஆண்டுகளுக்கு பின் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா

Published On 2025-01-05 05:23 GMT   |   Update On 2025-01-05 05:23 GMT
  • 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
  • பத்து ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் துவங்கிய நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் பிறகு நடத்த மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி துவங்கிய நான்காவது நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி துவங்கிய கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் அந்த அணி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது. இதோடு, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே தகுதி பெற்று இருந்தது. இந்த நிலையில், இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News