கிரிக்கெட் (Cricket)

சொதப்பல் சுப்மன் கில்லுக்கு இத்தனை வாய்ப்பு.. தமிழக வீரராக இருந்தால் நீக்கியிருப்பார்கள் - பத்ரிநாத்

Published On 2025-01-06 12:25 IST   |   Update On 2025-01-06 12:25:00 IST
  • டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது.
  • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் சுப்பிரமணியம் பத்ரிநாத் கலந்து கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மண்ணைக் கவ்வி உள்ளது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது

இந்த தொடரில் சுப்மன் கில் 2, 3, 5 ஆகிய மூன்று போட்டிகளில் விளையாடினார். மொத்தமே 93 ரன்கள் தான் எடுத்தார். எனவே தோற்றுப்போன கோபத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கில் பக்கம் திருப்பியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்பிரமணியம் பத்ரிநாத், ஒரு பேட்டராக சுப்மன் கில் ரன்களை அடிக்கவில்லை.

அது முடியாவிட்டாலும், களத்தில் அதிக நேரம் விளையாடி பந்தை பழையதாக்குவதோ, பவுலர்களை சோர்வடையவோ செய்திருக்க வேண்டும். அதுவும் இல்லை.

ஒருவேளை கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரராக இருந்திருந்தால், எப்போதோ இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News