சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் ஷகிப் அல் ஹசன் பந்து வீச தடை
- சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடந்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.
வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடந்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.
இந்த போட்டிகளில் பந்து வீசும் முறை விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக ஷகிப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அதற்கான சோதனையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபட்ட நிலையில், உண்மையில் பந்து வீசியதில் ஷகிப் அல் ஹசன் விதிகளை மீறியது தெரியவந்தது.
இதனையடுத்து, அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் பவுலிங் செய்வதிலிருந்து இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இனிமேல், ஐசிசி- ஆல் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.