கிரிக்கெட் (Cricket)
null
சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு- கிளாசனுக்கு இடமில்லை
- தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் கோப்பையை வென்று 27 ஆண்டுகள் ஆகிவிட்டது.
- சாம்பியன்ஸ் கோப்பையில் அறிமுக அணியாக ஆப்கானிஸ்தான் அணி அடியெடுத்து வைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- ஆபகானிஸ்தான் அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆடும் லெவனில் அதிரடி ஆட்டக்காரர் கிளாசன் இடம் பெறவில்லை.
தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் கோப்பையை வென்று 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1998-ம் ஆண்டு முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையை வசப்படுத்திய அந்த அணி அதன் பிறகு வென்றதில்லை.
சாம்பியன்ஸ் கோப்பையில் அறிமுக அணியாக ஆப்கானிஸ்தான் அணி அடியெடுத்து வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி கடந்த செப்டம்பரில் சார்ஜாவில் நடந்த ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.